பனையிலிருந்து உருவாகும் பொருள்கள்:
ஓலை குடுசை, - அதற்க்கு தேவையான அனைத்து பொருள்களும் பனை மரத்தில் இருந்தே பெறப்படுகிறது.
அவை:
ஓலை , பட்டை , மரம் , அவினி ,குழந்தைகளுக்கு விளையாட கைல் தரக்கூடிய கிளுகிளுப்பை என்று சொல்லக்கூடிய விளையாட்டு பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.மற்றும் காத்தாடி, போன்ற விளையாட்டு பொருளும் செய்து விளையாடினார்கள்.
பச்சை ஓலைகள் ஆடு,மாடுகளுக்கு வறட்சி காலங்களில் உணவாகவும் பயன்பட்டது.
பாளை - பதனீர் ( தெலுவு, கள், சுண்ணாம்பு தெலுவு ) - இதிலிருந்து உருவாகும் பொருள்கள் அதிகம்
அவை:
கருப்பட்டி, பனை கற்கண்டு, பனை வெல்லம், சாராயம்,சுக்கு கருப்பட்டி, கருப்பட்டி காபி மாற்றம் டீ
கருதாம் பாளை - இது ஆண் பனை மரத்திலிருந்து பெறக்கூடியவை. இதை கொண்டு கிராமப்புறங்களில் பொங்கல் திருவிழா கொண்டாடும் பொழுதும், கார்த்திகை கூம்பு விழா கொண்டாடும் பொழுதும் இதை பாதி அளவு மட்டும் எரித்து அதை எடுத்து தகுந்த முறையில் தயார் செய்து பொரிப்பந்தம் தயார்செய்து விளையாடுவார்கள் அது பார்ப்பதற்கு இப்போது நம் தீபாவளியில் கொழுத்தி விளையாடுகிற மத்தாப்பூ போன்றே இருக்கும்.
பனம் பட்டை
இதிலிருந்தே குடுசைகள் கட்ட பயன்படும் அவினி தயாரிக்கப்படுகிறது
பனை படையில் இருந்து சிறு சிறு கயிறுகள் போல உரித்து எடுக்கப்படுகிறது அதுவே அவினி, இதுவே குடுசை போன்றவற்றை கட்டும்பொழுது கயிறாக பயன்பட்டது.
இதேபோல் சிறு சிறு பாகங்களாக பிரிக்காமல் ஒரு பட்டையை முழுவதுமாக ஒரே முறைகள் பிரித்து எடுத்தால் அதுதான் உரியான் பட்டை என்று சொல்வார்கள்.
உரியன் பட்டை - இது முறம்,கூடைகள்,போன்ற அணைத்து வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.
பன்னாடை - இது கிராம புறங்களில் அடுப்பை விரைவாக பற்றவைக்க பயன்பட்டது, அது மட்டுமின்றி பதனீரை மரத்திலிருந்து இருக்கும்பொழுது அதில் இருக்கும் தூசு, குப்பைகளை வடிகட்ட இந்த பன்னாடையே வடிகட்டியாக பயன்பட்டது.
பட்டைகள் ஓரங்களில் இருக்கும் கருக்கு (கருக்கான் பட்டை ), இது பனை பட்டையின் இரு புறங்களிலும் இருக்கும். இதை கொண்டு நுங்கு, சிறிய குச்சிகள், சைதை பற்று கொண்ட அனைத்தையும் அறுக்கலாம் இதுவே இப்போது நம் பயன்படுத்துகிற ரம்பம் போல் செயல்பட்டது.
திடுப்பு - பனை பட்டை தகுந்த முறையில் வெட்டியெடுத்து அதை கரண்டியாக பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள் அதற்க்கு பெர்தான் திடுப்பு.
நுங்கு - பனை பழம்- சீம்பு கொட்டை - ஊமான் கொட்டை -பனை கிழங்கு
அதன் பிறகு திரும்ப புதிய பனை மரம் முளைத்து வரும்.
நுங்கு - மிகசிறந்த குளிர்ச்சி தரக்கூடிய உணவு பொருளாகும். இதிலும் சிறுவர்கள் நுங்கு வண்டி செய்து விளையாடுவார்கள்.
பனை பழம் - பழங்களில் சுட்டு சாப்பிடக்கூடிய பழம் நம் பனை மரம் பழம் மட்டுமே. ஆனால் பனை பழத்தை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.இது மட்டும் இல்லாமல் வேகவைத்தும் சாப்பிடலாம் அதுதான் சேவாய்ப்பழம்- இதை பனம் பழம் திரண்ட நிலையில் வெட்டி எடுத்து சிறு சிறு துண்டுகளாக சீவி தகுந்த அளவு தண்ணீரை ஊற்றி வேகவைத்து சாப்பிடுவார்கள்.நன்றாக பழுத்த பலத்தை தோல் எடுத்துவிட்டு அதில் இருக்கும் சதைப்பகுதியை ஆடு,மாடு போன்ற கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் அதை கரைத்துவிட்டு வெயில் காலங்களில் சிறந்ததாக பயன்படுத்தப்பட்டது .
சீம்பு கொட்டை - இவை பனம்பழத்தை மண்ணில் புதைத்து வைத்து சில நாள்கள் கழித்து பார்த்தால் அதில் சிறிய அளவில் முளைப்பு அதாவது பனை மரம் வளர்வதற்கான ஆரம்ப நிலை அதுவே ஆகும் அந்த கொட்டையை வெட்டி பார்த்தல் அதினுள் வெள்ளை நிறத்தில் சீம்பு இருக்கும் அதுவும் சாப்பிட மிகவும் ஏற்றது இனிப்பாக அருமையான சுவையுடன் இருக்கும்.

பனை மரம் முழுவதுமே-அதன் பாகங்கள் எல்லாமே, காய்ந்த பிறகு விரவாக அடுப்பு எரிப்பதற்காக, சமைப்பதற்கு பயன் படுகிறது.
இத்தனை பயன் தரக்கூடிய பனை மர கொட்டைகள் (விதைகள் ) சுண்ணாம்பு சூளைகளுக்கு விரவாக மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

0 Comments