பனை மரம் வகைகள் | Types of Palm Tree
பனை மரம் பல வகையான மரங்கள் இருக்கிறது. இது நம்மில் பலருக்கு தெரியாது.
பனை மரம் 34 வகைகள் உள்ளன.
இதில் பெரும்பாலும் அழிந்து விட்டன.
ஒரு சில வகையான பனை மரங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் இருக்கிறது.
மர வகைகளில் ஆண் மரம் பெண் மரம் என தனித்து இருக்கும் மரங்கள் பனைமரம் மட்டுமே.
ஆண் மரங்களிலிருந்து பழங்கள் பெற முடியாது ஆனால் அதிலும் விடும் அதிலும் பதநீர்,கள் எடுக்கப்படும்.
பெண் மரங்களில் மட்டுமே நுங்கு பனம்பழம் கிடைக்கும் இந்த பெண் மர பாறைகளிலும் பதநீர்,கள் எடுக்கப்படும்.
பனை மரம் வகைகள்:
1.ஆண் பனை
2.பென் பனை
3.கூந்தப்பனை
4.தாளிப்பனை
5.குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7.ஈச்சம்பனை
8.ஈழப்பனை
9.சீமைப்பனை
10.ஆதம்பனை
11.திப்பிலிப்பனை
12.உடலற்பனை
13.கிச்சிலிப்பனை
14.குடைப்பனை
15.இளம்பனை
16.கூறைப்பனை
17.இடுக்குப்பனை
18.தாதம்பனை
19.காந்தம்பனை
20.பாக்குப்பனை
21.ஈரம்பனை
22.சீனப்பனை
23.குண்டுப்பனை
24.அலாம்பனை
25.கொண்டைப்பனை
26.ஏரிலைப்பனை
27.ஏசறுப்பனை
28.காட்டுப்பனை
29.கதலிப்பனை
30.வலியப்பனை
31.வாதப்பனை
32.அலகுப்பனை
33.நிலப்பனை
34.சனம்பனை
இத்தனை வகை பனைமரங்கள் இருந்தாலும் நாம் அனைவருக்கும் தெரிந்தது பனைமரம் என்ற ஒன்று மட்டும் தான் இத்தனை வகைகளில் ஒரு சில வகைகள் மட்டும் இன்னும் இருக்கிறது. ஆனால் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் ஒரு சில இடங்களில் மட்டும் இதை கோயில்களில் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். இதனால் இந்த வகைகள் முற்றிலும் அழிந்து போகாமல் பாதுகாக்க உதவியாக இருக்கிறது.
இந்த 34 பனை மர வகைகளில் கூந்தப்பனை, தாளிப்பனை இன்னும் சில பல இடங்களில் இருக்கிறது.
இந்த தாழிப்பனை மிகவும் முக்கியமான ஒரு வகையாகும் ஏனென்றால் இதன் இலைகள் மிகவும் அகலமாக இருக்கும்.
எனவே அந்தக் காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தியது பனை ஓலை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் உலகப் பொதுமறையான திருக்குறள் எழுதியிருப்பதும் ஓலைச்சுவடியில் (பனை ஓலை) தான்.
இந்த ஓலைச் சுவடிகள் எழுத பயன்படுத்தப்படும் பனை ஓலை வகை எது வென்றால் இந்த தாளிப்பனை தான்.
இதன் அமைப்பு எழுதுவதற்காக ஏற்றதுபோல் அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்கு அழிந்து போகாமல் உறுதியாகவும் இருக்கக்கூடியது.
பொதுவாகவே பனை மரங்கள் மிகவும் உறுதியானவை கூரைகள் சரியான முறையில் வேய்ந்து விட்டால் பத்து வருடங்கள் கூட நிலைத்து நிற்கக் கூடியவை.
இதற்கு தாலிப்பனை என்று பெயர் வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அந்த காலங்களில் எல்லாம
திருமணத்திற்காக பெண்கள் கழுத்தில் கட்டப்படும் மாங்கல்யம் என்று சொல்லக்கூடிய தாலி செய்வதற்கு இந்த தாலி பணியை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாலி பனை ஓலையை வைத்து திருமண தாலி செய்திருக்கிறார்கள்.

0 Comments