நமக்கு தெரியாத பனைமரத்தின் சிறப்புகள்- Speciality Of palm Tree

நமக்கு தெரியாத பனைமரத்தின் சிறப்புகள்- Speciality Of palm Tree


நம்மில் பல பேருக்கு பனைமரத்தின் முழு சிறப்புகள்
இன்னும் தெரிய வில்லை.

பனை மரத்தில் இருந்து ஓலை, நுங்கு, பதநீர், கள்ளு தெழுவு மட்டும் தான் கிடைக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம்.
ஆனால் உண்மையில் பனை மாத்தில் இருந்து பல நூறு பயன்கள் இருக்கிறது.
அவைகளை பற்றி தான் இந்த கட்டுரையில் பாக்க இருக்கிறோம்.

பனை மரத்திலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் பல பயன்களை கொடுக்கிறது.
"உச்சி முதல் பாதம் வரை" என்பது போல "குறுத்து முதல் வேர் வரை" அனைத்துமே பயன் தரக்கூடியது.

"யானை இருந்தால் ஆயிரம், இறந்தாலும் ஆயிரம்" என்பார்கள் அது போல் பனை மரம் இருந்தாலும், இறந்தாலும் நமக்கு பயன் தரக்கூடியதாகவே உள்ளது.

பானை மரத்தின் ஓலை, பண்ணாடை, பட்டை, ஓலை, பட்டை யில் எடுக்க கூடிய அவுணி என்றும் சொல்லும் பனை மரப் பட்டை நார்-  கட்டுவதற்க்கு பயன்படுகிறது.
பனை கருக்கு- பனை மரப் பட்டையின் இரு ஓரங்களிலும் காணப்படும் கத்தி போன்ற அமைப்பு முந்தைய காலத்தில்
சிறு சிறு குச்சி போன்ற பொருள்களை அறுக்க பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக பனை மரத்திலிருந்தே கிடைக்கும் நுங்கு வெட்டுவதற்கு இந்த கருக்கு பனை பட்டையை பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதன் வடிவில் தான் கதிர் அருவாள் உருவாக்கப்பட்டிருக்கும். பல் பலாக அதன் அமைப்பு இருக்கும் இதன் வடிவம் பனை மரத்தின் கருக்கு பட்டை போலதான் காணப்படும். கதிர் அரிவாள் கிராமங்களில் கருக்கு அருவா என்றே அழைப்பார்கள்.

பனை பட்டையில் முழுமையாக உரித்து எடுக்கும் உரியாம் பட்டை நார் வீட்டு உபகரணப்  பொருட்க்கள் (உதாரணம்:  முரம், கூடை) தயாரிக்கவும் மற்ற உபயோக பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பனை மரத்து பண்ணாடை வடிகட்டியாக பயன்படுத்தப்பட்டன.
பனை மரத்தில் இருந்து இரக்கும் கள், பதநீர் இவற்றை வடிகட்ட, பனை மரத்தில் இருந்தே  கிடைக்கும் இந்த பண்ணாடை தான் பயன்பட்டது.
இதை  அடிப்படையாக கொண்டே இப்பொழுது நாம் பயன்படுத்துகின்றன காபி வடிகட்டி, மாவு சலிக்கும் சலடை போன்றவை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பனை மரத்தில் இருந்து இறக்கும் கல், பதநீர் உடலுக்கு மிகவும் பயன்தரக்கூடியது.

இங்கு சிலர் கள்ளு போதைப் பொருள் என எதிர்ப்பு தெரிவித்தும் குடிக்க தகுதியானது இல்லை என ஒதுக்கி கொண்டும் இருக்கிறார்கள்.
உண்மையில் கள் என்பது போதை பொருளே இல்லை.

முந்தை காலத்தில் விருந்தோம்பலில் கள் உணவு வகைகளில் ஒன்றாக வைக்கபட்டு இருக்கிறது.

"அதியமான் ஒளவை" க்கு விருந்து அளிக்கும் பொழுது அந்த விருந்தில் மேஜையில் கள்ளும் வைத்துதான் விருந்தளித்தார் என்பது வரலாற்று பாடலும், கதைகளும் குறிப்பிடுகிறது.
எனவே கள்ளு போதை பொருள் இல்லை என்பது தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.








Post a Comment

0 Comments

பனை மரம் வகைகள் | Types of Palm Tree