பனை மரங்களின் பயன்கள் மற்றும் சிறப்புகள்
பனைமரத்தின் பலநூறு பயன்கள்:
பனை மரம் நமக்கு பலநூறு பயன்களை தருகின்றன, அதன் வேர் முதல் ஓலை குருத்துவரை நமக்கு பயன் தருகின்றன. அதன் பாகங்கள் வீண்வேதே இல்லை.பனை மரம் பழங்காலத்து மரமாகும்.
பனை மரம ஒரு கற்பக விற்சகம்
இதன் பயன் அறிந்தே நம் முன்னோர்கள் அதிகம் வளர்த்துள்ளனர்.பனை வறட்சியும் தங்கி வளர கூடியது, நிலத்தடி நீரை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
ஆறு,குளம்,குட்டை,ஏரி,வயல் கரை போன்ற நீர் தேக்கங்களின் ஓரங்களில் அதிகம் பார்க்கலாம் - பனை நீரை தக்கவைத்துக் கொள்ளுவதனாலையே இதை இது போன்ற இடங்களில் அதிகமாக நம் முன்னோர்கள் வளர்த்துள்ளனர் .
பனை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன் தரக்கூடியதே.
பனை மரம் பயன் தரக்கூடிய பாகங்கள்:
•ஓலை
•பட்டை
•பாளை (பூ, அல்லது காய் வருவதற்கு முன்)
•நுங்கு
•பதநீர், கள்
•பனை பழம்
•பனை சீம்பு (பனை விதை முளைப்பு)
•பனை கிழங்கு
•மரம்
பனை மூலம் கிடைக்கும் பொருட்கள்:
•பனை ஓலை,
பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான பனை கைவினை பொருள்கள்.
1) பனை ஓலை கூடை
2) பனை ஓலை விசிறி
3) பனை ஓலை முக்கியமாக குடிசைகள் அமைக்க மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
4) குழந்தைகள் விளையாட கிளுகிளுப்பை செய்ய பயன்படுகிறது.
மேலும் இது போல வீட்டு உபயோக பல கைவினை பொருள்கள் தயாரிக்கப்படுகிறது
•பன்னாடை,
பனை ஓலை பட்டையை சுற்றி உள்ளது பன்னாடை.
இது கள், பதநீர் வடிகடட ஒரு வடிகட்டி போல் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பலபேறுக்கு பன்னாடை என திட்டும் முறை மட்டுமே தெரியும் ஆனால் ஏன் எதற்காக இப்படி திட்டுகிறார்கள் என அதன் பொருள் தெரிந்து இருக்காது.
இப்போது தெரிந்து கொள்ளுங்கள், பன்னாடை நல்லதை கீழே விட்டு கெட்டதை வடிகட்டி தன்னுள் வைத்துக் கொள்ளும்.
அதுமட்டுமின்றி விறகு எரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுப்பு பற்ற வைக்க இந்த பன்னாடை பயனுள்ளதாக இருக்கும்.
•பனை பட்டை,
பனை பட்டையும் நிறைய பயனுள்ள பொருட்களை நமக்கு கொடுக்கிறது.
பனை பட்டையில் இருந்து எடுக்கப்படும் அவுணி கட்டுவதற்கு மிகவும் சிறந்தது, மிகவும் உறுதுணையாக இருக்கும்.
எனவே பனை ஓலை கொண்டு வேய்யப்படும் கொட்டகை, குடுசை வீடுகள் இந்த அவுணி கொண்டே கட்டப்படும்.
•துடுப்பு
உணவு சமைக்க கரன்டியாகவும் பயன்படுகிறது.
அதாவது துடுப்பு, "பனை பட்டை துண்டாக்கி அதை தேவைக்கு ஏற்ப செதுக்கி எடுப்பது தான் துடுப்பு" சோறு சமைக்க கரன்டியாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக களி போன்ற நமது பாரம்பரிய உணவு (சோழ களி, கம்பு, ஆரியம்) செய்வதற்கு இப்போது நாம் பயன்படுத்தும் எவ்வர் சில்வர் கரன்டி கண்டிப்பாக பயன்படாது.
களி கிளறி சமைப்பதற்கு பனை பட்டையில் செய்யப்படும் துடுப்பே சிறந்தது.
மேலும் காய்ந்த பட்டைகள் விறகாக அடுப்பு எரிக்க பயன்படுத்தபடுகிறது.
•பாளை
நுங்கு வருவதற்கு முன் இருப்பது பாளை என்பார்கள்.
இதில் தான் பதனீர், பனைகள் எடுக்கப்படும்.
ஆண் மரத்தின் பாளை காயிந்த பின் அடுப்பு எரிக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக கார்த்திகை மாதம் தீபம் திருவிழா அன்று இரவில் தீ மூட்டி, தீபாவளி மத்தாப்பு போல தீ பந்தம் போன்ற சிலவற்றை செய்து சுற்றி விளையாடி கொண்டாடுவார்கள்.
இதில் அந்த மத்தாப்பு போல பொறி, பொறியாக நெருப்பு தெரிவதற்கு அந்த தீ பந்தத்தில் ஒரே சில கரி துண்டுகளை சேர்த்து தயார் செய்து ஒரு சிறு மூடை போல் தயார் செய்து கொள்வார்கள்.
அதில் முக்கியமானது ஆண் பனை மரத்தின் பாளை (இதை கருதாம்பாளை என்று சொல்வார்கள்) சேர்ப்பது தான்.
1 Comments
பயனுள்ள தகவல்!! மரங்களின் வகைகள் மற்றும் பயன்கள் | Marangalin Payangal
ReplyDelete